Enable Javscript for better performance
பங்குச் சந்தைகளுக்கு ஏற்றமிகு வாரம்- Dinamani

சுடச்சுட

    
    sensex

    ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகள் சரிவிலிருந்து மீண்டு ஏற்றம் கண்டன.
    அனைவரும் எதிர்பாராத வகையில் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் உர்ஜித் படேல் தலைமையிலான நிதிக் கொள்கை நிர்ணயக் குழு (எம்.பி.சி.) கடனுக்கான வட்டி விகிதங்களை குறைத்தது.
    வங்கிகள் குறுகிய கால அடிப்படையில் ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரெபோ ரேட்) 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை பங்கு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதாக அமைந்தது.
    சர்வதேச செலாவணி நிதியம், தயாரிப்புத் துறை உற்பத்தி தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக செப்டம்பரிலும் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்ததும், முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு கூடுதல் வலு சேர்த்தது. இதனால், முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீட்டை அதிகரித்தனர்.
    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததையடுத்து, எண்ணெய்-எரிவாயுத் துறை பங்குகளை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வாங்கினர். இதையடுத்து, அத்துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சராசரியாக 6.18 சதவீதம் அதிகரித்தது.
    உலோகத் துறை பங்குகளின் விலை 5.07 சதவீதமும், வீட்டு வசதித் துறை பங்குகளின் விலை 4.05 சதவீதமும், மோட்டார் வாகனம் 2.78 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள், 1.94 சதவீதமும், பொறியியல் பொருள்கள் துறை பங்குகளின் விலை சராசரியாக 1.77 சதவீதமும் உயர்ந்தன.
    இருப்பினும், தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகளை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி விற்பனை செய்ததையடுத்து, அத்துறை நிறுவனப் பங்குகளின் விலை சராசரியாக 1.43 சதவீதம் குறைந்தது. தொழில்நுட்பத் துறை பங்குகளின் விலை 0.58 சதவீதம் சரிந்தது.
    நிறுவனங்களைப் பொருத்தவரையில், கெயில் இந்தியா நிறுவனப் பங்கின் விலை அதிகபட்சமாக 10.73% ஏற்றம் கண்டது.
    டாடா ஸ்டீல் (8.55%), டாடா மோட்டார்ஸ் (5.79%), ஓ.என்.ஜி.சி. (4.29%), அதானி போர்ட்ஸ் (4.01%), மாருதி (3.71%), எஸ்.பி.ஐ. (3.01%), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (2.57%), ஏஷியன் பெயின்ட்ஸ் (2.02%), பஜாஜ் ஆட்டோ (1.88%), பார்தி ஏர்டெல் (1.77%), லார்சன் & டூப்ரோ (1.62%), ஹீரோ மோட்டோகார்ப் (1.58%) மற்றும் ஹிந்துஸ்தான் யுனிலீவர் (1.22%) ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்தன.
    மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 195 புள்ளிகள் (0.70%) ஏற்றம் கண்டு 28,061 புள்ளிகளாக நிலைத்தது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.19,026.44 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
    தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 86 புள்ளிகள் அதிகரித்து (1%) 8,697 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.1,05,549 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai