Enable Javscript for better performance
மொத்த வாகன விற்பனை 20 சதவீதம் அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கடந்த செப்டம்பர் மாதத்தில் நாட்டில் வாகன விற்பனை 20.16 சதவீதம் அதிகரித்ததாக இந்திய ஆட்டோ மொபைல் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்தது.
    புது தில்லியில் இந்திய ஆட்டோ மொபைல் தயாரிப்பாளர் சங்கம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கடந்த செப்டம்பர் மாதத்தில் பயணிகள் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை 2,78,428 ஆக இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் விற்பனையான பயணிகள் வாகன எண்ணிக்கையான 2,32,170-உடன் ஒப்பிடுகையில், இது 19,92 சதவீதம் கூடுதலாகும்.
    இதில் கார்களின் விற்பனை எண்ணிக்கை 1,95,259 ஆகும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாத விற்பனையைவிட நடப்பு ஆண்டில் கார் விற்பனை 15.14 சதவீதம் அதிகரித்துள்ளது. இரு சக்கர வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை 18,68,993 ஆகும். கடந்த ஆண்டு செப்டம்பரில் டூவீலர் விற்பனை எண்ணிக்கை 15,37,104-ஆக இருந்த நிலையில், தற்போது 21.59 சதவீதம் அதிகரித்துள்ளது.
    வர்த்தக வாகன விற்பனை கடந்த ஆண்டு நிலையைவிட 1.95 சதவீதம் குறைந்தது. செப்டம்பரில் விற்பனையான வர்த்தக வாகனங்களின் எண்ணிக்கை 61,621 ஆகும்.
    அனைத்து ரக வாகனங்களையும் கணக்கிலெடுக்கும்போது, விற்பனை 201.6 சதவீதம் அதிகரித்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் மொத்த வாகன விற்பனை எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் தற்போது 20.16 சதவீத வளர்ச்சி காணப்பட்டுள்ளது என்று இந்திய ஆட்டோ மொபைல் தயாரிப்பாளர் சங்கம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai