Enable Javscript for better performance
மொபைல் பேங்கிங்: ஐசிஐசிஐ வங்கியின் புதிய வசதிகள் அறிமுகம்- Dinamani

சுடச்சுட

    

    மொபைல் பேங்கிங்: ஐசிஐசிஐ வங்கியின் புதிய வசதிகள் அறிமுகம்

    By DIN  |   Published on : 08th October 2016 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செல்லிடப்பேசி வங்கிச் சேவையில் புதிய வசதிகளை ஐசிஐசிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
    இது குறித்து வங்கியின் கோவைப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ, விர்ச்சுவல் பேமண்ட் அட்ரஸ் திட்டத்தின் மூலம், தொடங்கப்பட்ட 3 வாரங்களில் சுமார் ஒரு லட்சம் முகவரிகள் பெறப்பட்டுள்ளன.
    இதன் மூலம் வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களுடைய செல்லிடப்பேசிகள் மூலமாக நாடு முழுவதிலும் உள்ள சுமார் 6,500 எச்.பி.சி.எல். பெட்ரோல் பம்புகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதித்ய பிர்லா ஃபேஷன் அண்ட் ரீடெயில் நிறுவனங்களில் விரைவில் பணம் செலுத்தும் வசதியைப் பெற முடியும்.
    அத்துடன், ஐ-மொபைல் ஸ்மார்ட் கீஸ் என்ற புதிய வசதியின் மூலம் சாட், மெஸன்ஜர், இ-மெயில் சேவைகளைப் பெறலாம். பாதுகாப்பான முறையில் பணம் செலுத்தும் வசதியும் அதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தங்களுடைய செல்லிடப்பேசி எண்ணை வங்கியில் பதிவு செய்து வைத்திருக்கும் எந்த ஒரு சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளரும் இதற்கான செயலியை கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப்-ஸ்டோர்களில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai