Enable Javscript for better performance
ரூ.4,619 கோடிக்கு அலைக்கற்றையை கையகப்படுத்தியது டாடா டெலிசர்வீசஸ்- Dinamani

சுடச்சுட

    

    ரூ.4,619 கோடிக்கு அலைக்கற்றையை கையகப்படுத்தியது டாடா டெலிசர்வீசஸ்

    By DIN  |   Published on : 08th October 2016 11:32 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் மும்பை, மகாராஷ்டிரம் உள்ளிட்ட தொலைத்தொடர்பு வட்டங்களில் சேவை அளிக்கும் வகையில் ரூ.4,619 கோடி மதிப்பிலான அலைக்கற்றையைக் கையகப்படுத்தியது.
    இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
    மும்பை மற்றும் மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு தொலைத்தொடர்பு வட்டங்களில் சேவை வழங்கும் வகையில் மொத்தம் ரூ.4,619 கோடி மதிப்பிலான அலைக்கற்றையை டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.
    குறிப்பாக, மும்பை மற்றும் மகாராஷ்டிரம் தொலைத்தொடர்பு வட்டங்களில் சேவை வழங்க 1800 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் 5 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை முறையே ரூ.2,446 கோடி மற்றும் ரூ.1,590 கோடிக்கு கையகப்படுத்தியுள்ளது. இந்த அலைக்கற்றைக்கான உரிமக் காலம் 20 ஆண்டுகளாகும் என்று டாடா டெலிசர்வீசஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    மும்பை மற்றும் மகாராஷ்டிர தொலைத்தொடர்பு வட்டங்களில் சேவை வழங்குவதற்கான அந்த நிறுவனத்தின் உரிமம் அடுத்த ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில் டாடா டெலிசர்வீசஸ் இந்த வட்டங்களுக்கான அலைக்கற்றையை கையகப்படுத்தியுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai