Enable Javscript for better performance
இன்ஃபோசிஸ் லாபம் ரூ.3,606 கோடி- Dinamani

சுடச்சுட

    

    நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் இரண்டாம் காலாண்டில் ரூ.3,606 கோடி லாபம் ஈட்டியது.
    இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விசால் சிக்கா தெரிவித்ததாவது:
    நடப்பு 2016-17-ஆம் நிதி ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனம் ஈட்டிய டாலர் மதிப்பின் அடிப்படையிலான வருவாய் 250 கோடி டாலராக (சுமார் ரூ.16,500 கோடி) இருந்தது. கடந்த நிதி ஆண்டு இதே கால அளவில் ஈட்டிய வருவாயுடன் ஒப்பிடுகையில் இது 8.2 சதவீதம் அதிகமாகும். நிகர லாபம் 3.8 சதவீதம் அதிகரித்து 53.9 கோடி டாலராக காணப்பட்டது.
    ரூபாய் மதிப்பின் அடிப்படையில் ஒட்டுமொத்த வருவாய் ரூ.15,635 கோடியிலிருந்து 10.7 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.17,310 கோடியாக இருந்தது. நிகர லாபம் ரூ.3,398 கோடியிலிருந்து 6.1 சதவீதம் அதிகரித்து ரூ.3,606 கோடியாக காணப்பட்டது.
    சென்ற ஏப்ரலில் நிறுவனத்தின் வருவாய் 11.5 சதவீதம் வளர்ச்சி காணும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூலை மதிப்பீட்டில் இது 10 சதவீதமாக குறைக்கப்பட்டது.
    சர்வதேச சந்தையில் தொடரும் மந்த நிலை மற்றும் நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் நிறுவனத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வருவாய் வளர்ச்சி 7.5-8.5 சதவீதம் அளவுக்கே இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
    இன்ஃபோசிஸ் நிறுவனம் இடைக்கால ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.11 வழங்க முடிவு செய்துள்ளது. செப்டம்பர் மாத இறுதி நிலவரப்படி நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை 1.99 லட்சமாகும். வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வருவாயை 2,000 கோடி டாலராக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து அதற்கேற்ப செயலாற்றி வருகிறோம் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai