Enable Javscript for better performance
தொலைத்தொடர்பு கோபுர வர்த்தகத்தில் 51% பங்குகளை விற்பனை செய்கிறது ஆர்-காம்- Dinamani

சுடச்சுட

    

    தொலைத்தொடர்பு கோபுர வர்த்தகத்தில் 51% பங்குகளை விற்பனை செய்கிறது ஆர்-காம்

    By DIN  |   Published on : 15th October 2016 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொலைத் தொடர்பு கோபுர வர்த்தகத்தில் 51 சதவீத பங்குகளை கனடா நாட்டைச் சேர்ந்த ப்ரூக்ஃபீல்டு நிறுவனத்துக்கு விற்பனை செய்யவுள்ளதாக வெள்ளிக்கிழமை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்-காம்) தெரிவித்தது.
    இதுகுறித்து ஆர்-காம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
    தொலைத் தொடர்பு கோபுர வர்த்தகத்தில் 51 சதவீத பங்குகளை விற்பனை செய்ய ஆர்-காம் முடிவு செய்துள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்த ப்ரூக்ஃபீல்டு இன்ஃப்ராஸ்ட்ரக்சர் குழுமத்துக்கு இந்தப் பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இதன் மூலம், ஆர்-காம் நிறுவனத்துக்கு ரூ.11,000 கோடி கிடைக்கும். எஞ்சியுள்ள 49 சதவீத பங்குகள் ஆர்-காம் வசமே இருக்கும்.
    பங்கு விற்பனையின் மூலம் கிடைக்கும் தொகையை நிறுவனத்தின் கடன் சுமையைக் குறைக்கப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது என்று ஆர்-காம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    தொலைத்தொடர்பு கோபுர விற்பனை மற்றும் வயர்லெஸ் வர்த்தகத்தை ஏர்செல் நிறுவனத்துடன் இணைத்தது ஆகிய நடவடிக்கைகளால் ஆர்-காம் நிறுவனத்தின் கடன் சுமை ரூ.42,000 கோடியிலிருந்து 60 சதவீதம் குறையும் என்று தெரிகிறது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் கடன் சுமை ரூ.17,000 கோடியாக இருக்கும்.
    மேலும், ரியல் எஸ்டேட் வர்த்தகத்தை விற்பனை செய்வதன் மூலம் ஆர்-காம் நிறுவனம் ரூ.5,000 கோடி திரட்டவும் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, ஆர்-காம் நிறுவனத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை ரூ.12,000 கோடியாக குறையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai