Enable Javscript for better performance
பொதுப் பணவீக்கம் 3.57 சதவீதமாக குறைந்தது- Dinamani

சுடச்சுட

    

    மொத்த விலை அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொதுப் பணவீக்கம் சென்ற செப்டம்பரில் 3.57 சதவீதமாக குறைந்தது.
    இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
    காய்கறிகளின் விலை சரிவடைந்ததையடுத்து சென்ற செப்டம்பரில் பொதுப் பணவீக்க விகிதம் 3.57 சதவீதமாக குறைந்தது. கடந்த ஆகஸ்டில் இது 3.74 சதவீதமாகவும், கடந்த ஆண்டு செப்டம்பரில் இது (-)4.59 சதவீதமாகவும் காணப்பட்டது.
    செப்டம்பரில் காய்கறிகளின் விலை (-)10.91 சதவீதம் சரிந்தது. ஜூலையில் இதற்கான பணவீக்கம் 28.45 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, வெங்காயத்தின் விலை (-) 70.52 சதவீதம் சரிந்தது. அதேசமயம், பருப்பு வகைகளின் விலை 23.99 சதவீதமும், உருளைக்கிழங்கின் விலை 73.31 சதவீதமும், பழங்களின் விலை 14.10 சதவீதமும் அதிகரித்தன.
    எனினும், சென்ற செப்டம்பரில் ஒட்டுமொத்த உணவுப் பொருள்களுக்கான பணவீக்க விகிதம் 5.75 சதவீதமாக இருந்தது. சென்ற ஆகஸ்ட் மாதத்தில் இது 8.23 சதவீதம் என்ற அளவில் காணப்பட்டது. ஜூலை மாதத்துக்கான பணவீக்க விகிதம் மறுமதிப்பீட்டில் 3.72 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai