ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் சனிக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.22,456-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கியக் காரணிகளாக உள்ளன.
சென்னையில் சனிக்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து, ரூ.2,807-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 60 பைசா உயர்ந்து ரூ.41.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.41,500 ஆகவும் இருந்தது.