Enable Javscript for better performance
ஐ.ஓ.சி. லாபம் ரூ.3,994 கோடி- Dinamani

சுடச்சுட

    
    ioc

    பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.) மூன்றாம் காலண்டில் ரூ.3,994.91 கோடி லாபம் ஈட்டியது.
    இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் பி. அசோக் தெரிவித்ததாவது:
    நடப்பு நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பருடன் வரையிலான மூன்றாவது காலாண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வருவாய் ரூ.1,15,161.11 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.96,783.11 கோடியாக காணப்பட்டது.
    ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின் மூலமாக கிடைத்த லாபம் 5.96 டாலரிலிருந்து (சுமார் ரூ.393) அதிகரித்து 7.79 டாலராக (சுமார் ரூ.514) இருந்தது.
    இதன் காரணமாக, நிகர லாபம் ரூ.3,095.75 கோடியிலிருந்து 29 சதவீதம் அதிகரித்து ரூ.3,994.91 கோடியாக இருந்தது. பங்குதாரர்களுக்கு 135 சதவீத இடைக்கால ஈவுத்தொகை வழங்க ஐ.ஓ.சி. நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, பங்கு ஒன்றுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.13.5 கிடைக்கும்.
    ஐ.ஓ.சி. நிறுவனத்தில் மத்திய அரசு 58.28 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இந்த இடைக்கால ஈவுத்தொகை அறிவிப்பின் மூலம் மத்திய அரசுக்கு ரூ.3,820.5 கோடி கிடைக்கும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai