Enable Javscript for better performance
சிண்டிகேட் வங்கி லாபம் ரூ.93 கோடி- Dinamani

சுடச்சுட

    
    syndicatebank

    பொதுத் துறையைச் சேர்ந்த சிண்டிகேட் வங்கியின் மூன்றாம் காலாண்டு லாபம் ரூ.93.56 கோடியாக இருந்தது.
    இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
    நடப்பு 2016-17 நிதி ஆண்டின் டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் சிண்டிகேட் வங்கி ரூ.6,554.04 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.6,188.25 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 5.91 சதவீத வளர்ச்சியாகும்.
    வரி செலவினம் ரூ.173.5 கோடியிலிருந்து சரிவடைந்து ரூ.49.59 கோடியாக காணப்பட்டது. இதன் காரணமாக, கடந்த நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.119.67 கோடி இழப்பை கண்டிருந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டில் ரூ.93.56 கோடி நிகர லாபம் ஈட்டப்பட்டது.
    வங்கி வழங்கிய கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 4.61 சதவீதத்திலிருந்து அதிகரித்து 8.69 சதவீதமாக இருந்தது. நிகர வாராக் கடன் விகிதம் 3.04 சதவீதத்திலிருந்து உயர்ந்து 5.63 சதவீதமாக இருந்தது என்று சிண்டிகேட் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai