Enable Javscript for better performance
டிடிகே பிரெஸ்டீஜ் வருவாய் ரூ.428 கோடி- Dinamani

சுடச்சுட

    

    சமையலறை சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான டிடிகே பிரெஸ்டீஜ் மூன்றாம் காலாண்டில் ரூ.428.2 கோடி வருவாய் ஈட்டியது.
    நடப்பு 2016-17 நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் டிடிகே பிரெஸ்டீஜ் நிறுவனம் ரூ.428.2 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.437.22 கோடியுடன் ஒப்பிடும்போது இது 2.06 சதவீதம் குறைவாகும்.
    விற்பனை குறைந்துபோனதையடுத்து, நிகர லாபம் ரூ.37.2 கோடியிலிருந்து 20.10 சதவீதம் சரிவடைந்து ரூ.29.72 கோடியாக இருந்தது என்று மும்பை பங்குச்சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் டிடிகே பிரெஸ்டீஜ் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai