Enable Javscript for better performance
பஜாஜ் ஆட்டோ லாபம் 5% சரிவு- Dinamani

சுடச்சுட

    
    Bajaj

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் 5.27 சதவீதம் சரிவடைந்தது.
    இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
    கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வாகன விற்பனை 10.49 சதவீதம் சரிவடைந்து 8,51,645-ஆக இருந்தது.
    இதன் காரணமாக, வருவாய் ரூ.5,884.25 கோடியிலிருந்து 9 சதவீதம் குறைந்து ரூ.5,345.13 கோடியாக இருந்தது.
    நிகர லாபம் ரூ.1,013.17 கோடியிலிருந்து 5.27 சதவீதம் சரிவடைந்து ரூ.976.82 கோடியாக காணப்பட்டது.
    பொருளாதாரத்தில் காணப்பட்ட மந்த நிலை, அன்னியச் செலாவணி தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாடு பாதிப்புக்குள்ளானது.
    குறிப்பாக, எகிப்து, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு காரணங்களால் மோட்டார் வாகன சந்தை இன்னும் சூடிபிடிக்காமல் உள்ளது. அதேபோன்று புதிய விதிமுறைகளால் ஈரானிலும் வாகன விற்பனை பாதிக்கப்பட்டது என்று பஜாஜ் ஆட்டோ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai