Enable Javscript for better performance
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா இழப்பு ரூ.182 கோடி- Dinamani

சுடச்சுட

    
    bankofmaharashtra

    தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுள் ஒன்றான பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா மூன்றாவது காலாண்டில் ரூ.182.51 கோடி இழப்பை சந்தித்துள்ளது.
    இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
    நடப்பு 2016-17 நிதி ஆண்டின் அக்டோபர்-டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் வருவாய் ரூ.3,473.77 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.3,475.98 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 0.06 சதவீதம் குறைவாகும்.
    டிசம்பர் மாத இறுதி நிலவரப்படி வங்கி வழங்கிய கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 7.97 சதவீதத்திலிருந்து அதிகரித்து 15.08 சதவீதமாக இருந்தது. அதேபோன்று, நிகர வாராக் கடன் விகிதமும் 5.52 சதவீதத்திலிருந்து உயர்ந்து 10.67 சதவீதமாக காணப்பட்டது.
    இதையடுத்து, வாராக் கடன் இடர்பாட்டை சமாளிக்க அதிகமான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து மூன்றாவது காலாண்டில் ரூ.182.51 கோடி நிகர இழப்பு ஏற்பட்டது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ரூ.89.06 கோடி நிகர லாபம் ஈட்டப்பட்டது என்று பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai