Enable Javscript for better performance
முக்கிய 8 துறைகள் உற்பத்தி 5.6% வளர்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி கடந்த ஆண்டு டிசம்பரில் 5.6 சதவீதமாக அதிகரித்தது.
    இது, முந்தைய நவம்பர் மாதத்தில் 4.9 சதவீதமாகவும், 2015-ஆம் ஆண்டு டிசம்பரில் 2.9 சதவீதமாகவும் காணப்பட்டது என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
    ஒட்டுமொத்த தொழிலக உற்பத்தியில், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உருக்கு, உரம், சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகிய எட்டு துறைகளின் பங்களிப்பு மட்டும் 38 சதவீத அளவுக்கு உள்ளது.
    சென்ற டிசம்பரில் சுத்திகரிப்பு துறை மற்றும் உருக்கு துறையின் உற்பத்தி முறையே 6.4 சதவீதம் மற்றும் 14.9 சதவீதம் என்ற அளவில் அதிகரித்தது. இருப்பினும், கச்சா எண்ணெய், உரம், இயற்கை எரிவாயு மற்றும் சிமெண்ட் ஆகிய துறைகளின் உற்பத்தி பின்னடைவைக் கண்டன. நிலக்கரி துறையின் உற்பத்தி 5.3 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாகவும்,மின் துறையின் உற்பத்தி 8.8 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகவும் சரிந்தது.
    நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத கால அளவில் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி 5 சதவீதமாக அதிகரித்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் இது 2.6 சதவீதமாக காணப்பட்டது என்று அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai