Enable Javscript for better performance
சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் லாபம் 63% அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    டி.வி.எஸ். குழுமத்தைச் சேர்ந்த சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் 63 சதவீதம் அதிகரித்தது.

    இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
    நடப்பு 2016-17 நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் வருவாய் ரூ.709.32 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.613.90 கோடியாக காணப்பட்டது.
    ஏற்றுமதி வாயிலான வருவாய் ரூ.211.41 கோடியிலிருந்து வளர்ச்சி கண்டு ரூ.260.50 கோடியாக இருந்தது.
    நிகர லாபம் ரூ.46.11 கோடியிலிருந்து 63.3 சதவீதம் அதிகரித்து ரூ.75.34 கோடியாக காணப்பட்டது.
    நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத கால அளவில் மொத்த வருவாய் ரூ.1,906.15 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.2,160.53 கோடியாக இருந்தது.
    ஏற்றுமதி வாயிலான வருவாய் ரூ.667.90 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.766.57 கோடியாக காணப்பட்டது.
    நிகர லாபம் ரூ.126.79 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.227.82 கோடியாக இருந்தது என்று சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai