Enable Javscript for better performance
சென்செக்ஸ் 84 புள்ளிகள் உயர்வு- Dinamani

சுடச்சுட

    
    sensex

    மத்திய பட்ஜெட் எதிரொலியால் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை மும்பை பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 84 புள்ளிகள் ஏற்றம் கண்டது.
    வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு, வீட்டுவசதி, கிராமப்புற மேம்பாடு மற்றும் விவசாயம் ஆகிய துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    இதன் காரணமாக, பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என்பதுடன் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என்ற நிலைப்பாடு முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதன் எதிரொலியாக புதன்கிழமை சென்செக்ஸ் 485
    புள்ளிகள் அதிகரித்த நிலையில் இரண்டாவது நாளான வியாழக்கிழமையன்றும் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
    குறிப்பாக, நுகர்வோர் சாதன துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளை சில்லறை முதலீட்டாளர்கள் போட்டிபோட்டு வாங்கியதையடுத்து அத்துறை நிறுவனப் பங்குகளின் விலை சராசரியாக 2.18 சதவீதம் வரை அதிகரித்தது.
    நிறுவனங்களைப் பொருத்தவரையில், இன்ஃபோசிஸ், டி.சி.எஸ். மற்றும் டெக் மஹிந்திரா நிறுவனப் பங்குகளின் விலை 2.85 சதவீதம் வரை அதிகரித்தது.
    அதேசமயம், ஜனவரியில் வாகன விற்பனை குறைந்து போனதையடுத்து, ஹீரோ மோட்டோகார்ப், மஹிந்திரா & மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட வாகன துறை நிறுவனப் பங்குகள் முதலீட்டாளர்களிடம் வரவேற்பை இழந்தன.
    மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 84 புள்ளிகள் அதிகரித்து 28,226 புள்ளிகளாக நிலைத்தது. கடந்தாண்டு அக்டோபர் 4-ஆம் தேதிக்கு பிறகு காணப்படும் அதிகபட்ச அளவாகும் இது.
    தேசிய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 17 புள்ளிகள் உயர்ந்து 8,734 புள்ளிகளாக நிலைத்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai