Enable Javscript for better performance
டி.வி.எஸ். மோட்டார் வாகன விற்பனையில் சரிவு- Dinamani

சுடச்சுட

    
    tvs

    இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சென்னையைச் சேர்ந்த டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் ஜனவரி மாத விற்பனை லேசான சரிவைக் கண்டது.
    இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
    நடப்பாண்டின் ஜனவரி மாதத்தில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் 2,07,059 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 2,08,485 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது சற்று குறைவாகும்.
    இருசக்கர வாகன விற்பனை 2,01,233 என்ற எண்ணிக்கையிலிருந்து அதிகரித்து 2,02,209-ஆக இருந்தது.
    அதேசமயம், உள்நாட்டு சந்தையில் இருசக்கர வாகன விற்பனை 1,72,162லிருந்து சற்று குறைந்து 1,72,101-ஆக காணப்பட்டது.
    இருப்பினும், ஸ்கூட்டர்கள் விற்பனை 62,552 என்ற எண்ணிக்கையிலிருந்து 12 சதவீதம் அதிகரித்து 70,049-ஆக இருந்தது.
    ஜனவரியில் மோட்டார்சைக்கிள் விற்பனை 83,374லிருந்து சரிவடைந்து 60,275-ஆகவும், மூன்று சக்கர வாகன விற்பனை 7,252 என்ற எண்ணிக்கையிலிருந்து வீழ்ச்சியடைந்து 4,850-ஆகவும் காணப்பட்டது.
    ஒட்டுமொத்த வாகன ஏற்றுமதி 34,823லிருந்து சற்று குறைந்து 34,110-ஆக இருந்தது. அதேசமயம், இருசக்கர வாகன ஏற்றுமதி 29,071லிருந்து அதிகரித்து 30,108-ஆக காணப்பட்டது என்று டி.வி.எஸ். மோட்டார் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    ஹீரோ மோட்டோகார்ப்: சென்ற ஜனவரி மாதத்தில் ஹீரோ மேட்டோகார்ப் நிறுவனம் 4,87,088 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 5,63,348 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 13.53 சதவீத சரிவாகும்.
    மோட்டார் வாகன சந்தையில் சாதகமான சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக, வாகன விற்பனை இயல்பு நிலைக்கு திரும்பும் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    பஜாஜ் ஆட்டோ: நடப்பாண்டு ஜனவரியில் பஜாஜ் ஆட்டோ வாகன விற்பனை 18 சதவீதம் சரிந்து 2,41,917-ஆக காணப்பட்டது. கடந்தாண்டின் இதே கால அளவில் விற்பனை 2,93,939-ஆக இருந்தது.
    மோட்டார்சைக்கிள் விற்பனை 2,52,988 என்ற எண்ணிக்கையிலிருந்து 16 சதவீதம் குறைந்து 2,11,824-ஆக காணப்பட்டது.
    அதேபோன்று வர்த்தக வாகனங்கள் விற்பனையும் 40,951லிருந்து சரிவடைந்து 30,093-ஆக இருந்தது.
    வாகனங்கள் ஏற்றுமதி 19 சதவீதம் வீழ்ச்சியடைந்து 1,06,729-ஆக காணப்பட்டது என பஜாஜ் ஆட்டோ மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai