Enable Javscript for better performance
பொதுக் காப்பீட்டு நிறுவன பங்கு விற்பனை: ரூ.11,000 கோடி திரட்ட திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பொதுக் காப்பீட்டு நிறுவன பங்கு விற்பனை: ரூ.11,000 கோடி திரட்ட திட்டம்

    By DIN  |   Published on : 03rd February 2017 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொதுக் காப்பீட்டு நிறுவன பங்கு விற்பனை மூலம் ரூ.11,000 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
    இதுகுறித்து பங்கு விலக்கல் துறை செயலர் நீரஜ் குப்தா தெரிவித்ததாவது: வரும் 2017-18-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் பங்கு விற்பனை மூலம் ரூ.72,500 கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட அளவான ரூ.45,500 கோடியை காட்டிலும் இது அதிகமான தொகையாகும்.
    மொத்த இலக்கில், சிறுபான்மை பங்கு விற்பனை மூலம் ரூ.46,500 கோடியும், பொதுத் துறை நிறுவனங்களில் மத்திய அரசு கொண்டுள்ள பங்கு விற்பனை மூலம் ரூ.15,000 கோடியும் திரட்டப்பட உள்ளது.
    இதற்கு ஏதுவாக, பொது காப்பீட்டு நிறுவனங்களை பங்குச் சந்தையில் பட்டியலிட்டு அதன் மூலம் ரூ.11,000 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட பங்கு விற்பனை இலக்கை எட்ட தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai