Enable Javscript for better performance
விஜயா வங்கி லாபம் 4 மடங்கு அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    
    Vijaya

    பொதுத் துறையைச் சேர்ந்த விஜயா வங்கியின் மூன்றாம் காலாண்டு லாபம் 4 மடங்கு அதிகரித்தது.
    இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
    நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) விஜயா வங்கி ரூ.3,714.37 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த 2015-16 நிதியாண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.3,237.02 கோடியாக காணப்பட்டது.
    வங்கி வழங்கிய கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 4.32 சதவீதத்திலிருந்து உயர்ந்து 6.98 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 2.98 சதவீதத்திலிருந்து அதிகரித்து 4.74 சதவீதமாகவும் காணப்பட்டது.
    இதையடுத்து, வாராக் கடன் இடர்பாட்டை சமாளிக்க ஒதுக்கப்பட்ட தொகை மூன்றாவது காலாண்டில் ரூ.278.72 கோடியிலிருந்து கணிசமான அளவில் அதிகரித்து ரூ.424.17 கோடியாக இருந்தது.
    வாராக் கடன் அதிகரித்துள்ள நிலையிலும், வங்கியின் நிகர லாபம் ரூ.52.61 கோடியிலிருந்து நான்கு மடங்கு அதிகரித்து ரூ.230.28 கோடியாக இருந்தது என்று விஜயா வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai