Enable Javscript for better performance
கிளென்மார்க் ஃபார்மா லாபம் ரூ.477 கோடி- Dinamani

சுடச்சுட

    
    Glenmark

    மருந்து தயாரிப்பு நிறுவனமான கிளென்மார்க் ஃபார்மசூட்டிக்கல்ஸ் மூன்றாம் காலாண்டில் ரூ.477.03 கோடி லாபம் ஈட்டியது.

    இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
    நடப்பு நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் கிளென்மார்க் ஃபார்மா வருவாய் ரூ.2,535 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டில் வருவாய் ரூ.1,778.29 கோடியாக காணப்பட்டது.
    நிகர லாபம் ரூ.196.17 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.477.03 கோடியாக காணப்பட்டது.
    அமெரிக்க சந்தையில் மருந்து விற்பனை சிறப்பான அளவில் அதிகரித்ததையடுத்து, நிகர லாபம் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாக கிளென்மார்க் ஃபார்மா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai