Enable Javscript for better performance
வங்கதேசத்தில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் புதிய ஆலை- Dinamani

சுடச்சுட

    
    ashok-leyland

    ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம், வங்கதேசத்தில் புதிய ஆலையை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான வினோத் கே. தாசரி கூறியுள்ளதாவது:
    சர்வதேச சந்தையில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு வரவேற்பு பெருகி வருகிறது. இதையடுத்து, அசோக் லேலண்ட் நிறுவனம் பல்வேறு நாடுகளில் தனது வர்த்தக விநியோகத் தொடர்புகளை அதிகரிப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.
    அந்த வகையில், வங்கதேசம் அசோக் லேலண்ட் நிறுவனத்துக்கு மிக முக்கிய சந்தையாக திகழ்கிறது.
    அதன் காரணமாகவே, வங்கதேச தலைநகர் டாக்காவில் அசோக் லேலண்ட் நிறுவனம் புதிய ஆலையை அமைத்துள்ளது.
    37 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையை கட்டமைக்க 15 மாதங்கள் ஆனது.
    இந்த ஆலையில் வாகன உபகரணங்களைத் தயாரிக்க மற்றும் ஒருங்கிணைக்க அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
    இப்புதிய ஆலையின் மூலம் மாதத்துக்கு அனைத்து ரகங்களையும் சேர்ந்த 600 முதல் 800 வாகனங்கள் வரையில் உற்பத்தி செய்ய முடியும்.
    வங்கதேசத்தில் ஐ.எப்.ஏ.டி. ஆட்டோஸ் நிறுவனத்துடன் அசோக் லேலண்ட் நிறுவனம் இணைந்து வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai