வேர்ல்பூல் இந்தியா லாபம் 45% அதிகரிப்பு
By DIN | Published on : 04th February 2017 12:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள வேர்ல்பூல் இந்தியா நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் 45 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை சந்தைக்கு வழங்கிய அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2016-17-ஆம் நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் வேர்ல்பூல் இந்தியா நிறுவனத்தின் வருவாய் ரூ.900.94 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.890.86 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 1.13 சதவீதம் அதிகமாகும்.
நிறுவனத்தின் அனைத்து பிரிவிலான பொருள்களின் விற்பனையிலிருந்தும் கிடைக்கும் லாபம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. மேலும், செலவின குறைப்பு நடவடிக்கையாலும் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 45.09 சதவீதம் அதிகரித்து ரூ.55.44 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் லாபம் ரூ.38.21 கோடியாக காணப்பட்டது என்று வேர்ல்பூல் இந்தியா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.