Enable Javscript for better performance
ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாபம் 69% உயர்வு- Dinamani

சுடச்சுட

    
    finolex

    பி.வி.சி. பைப்ஸ் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 69.54 சதவீதம் அதிகரித்தது.
    இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
    நடப்பு 2016-17 நிதியாண்டின் டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ஃபினோலெக்ஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.662.43 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.625.08 கோடியுடன் ஒப்பிடும்போது இது 5.97 சதவீத வளர்ச்சியாகும்.
    சிக்கன நடவடிக்கைகளையடுத்து செலவினம் ரூ.553.75 கோடியிலிருந்து 1.26 சதவீதம் குறைந்து ரூ.546.75 கோடியாகக் காணப்பட்டது.
    அதையடுத்து, நிகர லாபம் ரூ.42.43 கோடியிலிருந்து 69.54 சதவீதம் அதிகரித்து ரூ.71.94 கோடியாக இருந்தது என்று ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai