Enable Javscript for better performance
ஓரியண்டல் வங்கியின் நஷ்டம் ரூ.130 கோடி- Dinamani

சுடச்சுட

    
    ORIENTAL

    பொதுத் துறை வங்கியான ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மூன்றாம் காலாண்டில் ரூ.130 கோடி நிகர நஷ்டத்தைக் கண்டது.
    இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
    நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்- டிசம்பர்) ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வருவாய் ரூ.5,415.97 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.5,350.48 கோடியுடன் ஒப்பிடுகையில் இது சற்று அதிகமாகும்.
    அதேசமயம், வட்டி வருவாய் ரூ.4,955.96 கோடியிலிருந்து சரிவடைந்து ரூ.4,438.62 கோடியாக காணப்பட்டது.
    இருப்பினும், கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.424.70 கோடியாக காணப்பட்ட நிகர நஷ்டம், நடப்பு நிதியாண்டில் ரூ.130 கோடியாக குறைந்துள்ளது.
    வங்கி வழங்கிய கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 7.75 சதவீதத்திலிருந்து அதிகரித்து 13.80 சதவீதமாக இருந்தது. நிகர வாராக் கடன் விகிதம் 4.99 சதவீதத்திலிருந்து உயர்ந்து 9.68 சதவீதமாக காணப்பட்டது என்று ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai