Enable Javscript for better performance
டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் லாபம் 19% சரிவு- Dinamani

சுடச்சுட

    
    reddylab

    டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸின் மூன்றாம் காலாண்டு லாபம் 19 சதவீதம் சரிந்தது.
    இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி அபிஜித் முகர்ஜி தெரிவித்ததாவது:
    நடப்பு நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் டாக்டர் ரெட்டீஸ் லேப் வருவாய் 7 சதவீதம் குறைந்து ரூ.3,707 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.3,968 கோடியாக காணப்பட்டது. குறிப்பாக, வட அமெரிக்காவில் ஜெனரிக் மருந்துகளின் விற்பனை 15 சதவீதம் குறைந்து ரூ.1,660 கோடியாக இருந்தது. அதன் காரணமாக, உலக நாடுகளின் சந்தைகளில் நிறுவனத்தின் மருந்துகள் விற்பனை 9 சதவீதம் அளவுக்கு சரிந்தது.
    உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் பிரச்னையால் இந்தியாவிலும் மருந்து விற்பனை பாதிக்கப்பட்டது.
    அதையடுத்து, நிகர லாபம் 19 சதவீதம் வீழ்ச்சியடைந்து ரூ.470 கோடியாக காணப்பட்டது என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai