Enable Javscript for better performance
அரசு வங்கிகளில் கூடுதல் மூலதனம் செலுத்துவது எப்போது?- Dinamani

சுடச்சுட

    

    அரசு வங்கிகளில் கூடுதல் மூலதனம் செலுத்துவது எப்போது?

    By DIN  |   Published on : 06th February 2017 02:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொதுத் துறையைச் சேர்ந்த வங்கிகளில் நான்கு ஆண்டுகளில் கூடுதல் மூலதனமாக ரூ. 70,000 கோடி மூலதனம் செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. "இந்திரதனுஷ்' என்னும் அந்த திட்டத்தின் கீழ், வங்கிகளும் வெளிச் சந்தையிலிருந்து ரூ. 1.1 லட்சம் கோடி திரட்ட வேண்டும். "பேஸல்-3' என்னும் சர்வதேச வங்கி மூலதன விதிமுறைகளைப் பின்பற்றுவதற்காக இந்த நடவடிக்கை.
    இதன்படி, 2015-2016 நிதி ஆண்டில் ரூ. 25,000 கோடி மூலதனம் அளிக்கப்பட்டது. 2016-2017 நிதி ஆண்டில் ரூ. 25,000 கோடி கூடுதல் மூலதனத்தை அரசு வங்கிகள் பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ரூ. 22,915 கோடி ஏற்கெனவே 13 பொதுத் துறை வங்கிகளுக்கு அளிக்கப்பட்டுவிட்டன.
    எஞ்சிய தொகையை எவ்வாறு வங்கிகளுக்கு வழங்குவது என்பதை அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 26 அரசு வங்கிகளில் 5 வங்கிகள் மட்டுமே தங்களின் மூன்றாம் காலாண்டு நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளன. வங்கிகளின் செயல்பாடுகளைக் கணக்கில் எடுத்த பிறகுதான், எந்த வங்கிக்கு என்ன தொகையை மூலதனமாக அளிப்பது என்று முடிவு எடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. காலாண்டு வளர்ச்சி விகிதம், வருடாந்தர வளர்ச்சி எதிர்பார்ப்பு ஆகியவற்றைப் பொருத்து, ஒவ்வொரு வங்கியின் மூலதனத் தொகை தீர்மானிக்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai