Enable Javscript for better performance
கார்பரண்டம் யூனிவர்ஸல் லாபம் 44% அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த கார்பரண்டம் யூனிவர்ஸல் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் 44 சதவீதம் அதிகரித்தது.
    இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மற்றும் வர்தா புயல் தாக்குதலால் உள்நாட்டில் விற்பனை மிகவும் பாதிக்கப்பட்டது. இருப்பினும், அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு நிறுவனத்தின் விற்பனை அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் 6 சதவீதம் அதிகரித்து ரூ.549 கோடியாக இருந்தது.
    கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் விற்பனை ரூ.518 கோடியாக காணப்பட்டது. நிகர லாபம் ரூ.30 கோடியிலிருந்து 44 சதவீதம் அதிகரித்து ரூ.44 கோடியாக காணப்பட்டது.
    நடப்பு நிதி ஆண்டுக்கு ரூ.1 முகமதிப்புடைய பங்கு ஒன்றுக்கு ரூ.1 இடைக்கால ஈவுத்தொகை வழங்க நிர்வாகக் குழு பரிந்துரை செய்துள்ளது என்று கார்பரண்டம் யூனிவர்ஸல் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai