Enable Javscript for better performance
டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லாபம் ரூ.27 கோடி- Dinamani

சுடச்சுட

    
    tube

    டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் இந்தியா (டி.ஐ.ஐ.) நிறுவனம் மூன்றாம் காலாண்டில் ரூ.27.47 கோடி லாபம் ஈட்டியது.
    இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
    நடப்பு 2016-17 நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் டி.ஐ.ஐ. நிறுவனத்தின் வருவாய் ரூ.1,041.29 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.968.31 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 7.53 சதவீத வளர்ச்சியாகும்.
    செலவினம் ரூ.916.04 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.996.50 கோடியாக காணப்பட்டது. அதேசமயம், நிகர லாபம் ரூ.16.41 கோடியிலிருந்து 67 சதவீதம் அதிகரித்து ரூ.27.47 கோடியாக இருந்தது.
    நடப்பு நிதி ஆண்டுக்கு ரூ.2 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.1.25 இடைக்கால ஈவுத்தொகையாக வழங்க நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் இந்தியா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai