Enable Javscript for better performance
வட்டி குறைப்பு எதிர்பார்ப்பு: சென்செக்ஸ் 198 புள்ளிகள் அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    வட்டி குறைப்பு எதிர்பார்ப்பு: சென்செக்ஸ் 198 புள்ளிகள் அதிகரிப்பு

    By DIN  |   Published on : 07th February 2017 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sensex

    கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பால் மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 198 புள்ளிகள் ஏற்றம் கண்டு நான்கு மாதங்களுக்கு பிறகு புதிய உச்சத்தை எட்டியது.
    மத்திய பட்ஜெட்டில் நிதி சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சில்லறை பணவீக்கமும் பெருமளவு கட்டுக்குள் உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி புதன்கிழமை வெளியிட உள்ள நிதிக் கொள்கை ஆய்வில் கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது.
    அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அதிரடியால் அந்நாட்டில் வேலைவாய்ப்பு விகிதம் எதிர்பார்ப்பை விட அதிகரித்துள்ளது என்ற செய்தியும் முன்னணி நாடுகளின் பங்குச் சந்தைகளில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. முதலீட்டாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றதையடுத்து ரியல் எஸ்டேட் துறை நிறுவனப் பங்குகளின் விலை 1.90 சதவீதம் வரை அதிகரித்தது. இதையடுத்து, வேகமாக விற்பனையாகும் நுகர் பொருள்கள் துறை மற்றும் நுகர்வோர் சாதனங்கள் துறை தலா 1.27 சதவீதம் அதிகரித்தன.
    குறிப்பாக, ரியல் எஸ்டேட் துறை நிறுவனமான எச்.டி.ஐ.எல். பங்கின் விலை அதிகபட்சமாக 7.80 சதவீதமும், கோத்ரெஜ் பிராப்பர்ட்டீஸ் பங்கு 3.32 சதவீதமும், பிரஸ்டீஸ் எஸ்டேட்ஸ் புராஜக்ட்ஜ் 2.83 சதவீதமும், டி.எல்.எஃப். 1.32 சதவீதமும் அதிகரித்தன.
    இவைதவிர, ஸன் ஃபார்மா (4.20%), ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி (3.18%), அதானி போர்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், ஐ.டி.சி., எச்.யு.எல். மற்றும் கெயில் நிறுவனப் பங்குகளின் விலையும் கணிசமான ஏற்றத்தைக் கண்டன. அதேசமயம், லாப நோக்கம் கருதி விற்பனை செய்ததையடுத்து, டாக்டர் ரெட்டீஸ், சிப்லா, ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா, பாரத ஸ்டேட் வங்கி, பவர் கிரிட் பங்குகளின் விலை சரிவைக் கண்டது. சென்செக்ஸில் இடம் பெற்ற 30 நிறுவனங்களுள் 22 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 8 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் காணப்பட்டன.
    மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 198 புள்ளிகள் (0.70%) அதிகரித்து 28,439 புள்ளிகளாக நிலைத்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு காணப்படும் அதிகபட்ச அளவாகும் இது. தேசிய பங்குச்
    சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி
    60 புள்ளிகள் (0.69%) உயர்ந்து 8,801 புள்ளிகளாக நிலைத்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai