Enable Javscript for better performance
ஈ.ஐ.டி. பாரி லாபம் ரூ.12 கோடி- Dinamani

சுடச்சுட

    
    eid-parry

    முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த ஈ.ஐ.டி. பாரி நிறுவனம் மூன்றாவது காலாண்டில் ரூ.12 கோடி லாபம் ஈட்டியது.

    இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
    நடப்பு நிதி ஆண்டின் டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ஈ.ஐ.டி. பாரி நிறுவனத்தின் விற்றுமுதல் ரூ.542 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் விற்றுமுதல் ரூ.619 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 12.43 சதவீதம் குறைவாகும்.
    அதேசமயம், கடந்த நிதி ஆண்டில் ரூ.43 கோடி இழப்பு ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது ரூ.12 கோடி லாபம் ஈட்டப்பட்டது.
    நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத கால அளவில் விற்றுமுதல் ரூ.1,700 கோடியிலிருந்து சற்று குறைந்து ரூ.1,699 கோடியாக காணப்பட்டது.
    அதேசமயம், கடந்த நிதி ஆண்டில் ரூ.215 கோடி இழப்பு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது ரூ.119 கோடி லாபம் ஈட்டப்பட்டதாக ஈ.ஐ.டி. பாரி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai