Enable Javscript for better performance
ஐ.டி.சி. நிறுவனத்தின் 2%பங்குகள் விற்பனை: ரூ.6,700 கோடி திரட்டிய மத்திய அரசு- Dinamani

சுடச்சுட

    

    ஐ.டி.சி. நிறுவனத்தின் 2%பங்குகள் விற்பனை: ரூ.6,700 கோடி திரட்டிய மத்திய அரசு

    By DIN  |   Published on : 08th February 2017 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஐ.டி.சி. நிறுவனத்தின் 2 சதவீத பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.6,700 கோடி வருவாய் கிடைத்தது.
    இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
    ஐ.டி.சி. நிறுவனத்தில் யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (எஸ்.யு.யு.டி.ஐ.) 11.17 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. இதில் 2 சதவீத பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்தது.
    ஐ.டி.சி. பங்கின் இறுதி விலையை (ரூ.276) காட்டிலும் 0.15 காசு தள்ளுபடியில் இப்பங்குகள் விற்பனை செய்யப்பட்டன.
    அதன்படி, ரூ.275.85 என்ற விலையில் பங்குகள் அனைத்தும் எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டன. இதையடுத்து, இப்பங்கு விற்பனையின் மூலம் மத்திய அரசு ரூ.6,700 கோடியை திரட்டியது.
    இந்த பங்கு விற்பனையை அடுத்து, ஐ.டி.சி. நிறுவனத்தில் எஸ்.யு.யு.டி.ஐ. கொண்டுள்ள பங்கு மூலதனம் 9.17 சதவீதமாக குறைந்துள்ளது என்று அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
    நடப்பு நிதி ஆண்டில் இதுவரையில் 12 நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்த வகையில் மத்திய அரசு ரூ.39,000 கோடி திரட்டியுள்ளது. பங்கு விலக்கல் மூலம் நடப்பு நிதி ஆண்டில் ரூ.45,500 கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
    ஐ.டி.சி. தவிர மேலும் 51 நிறுவனங்களில் எஸ்.யு.யு.டி.ஐ. பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. குறிப்பாக, எல் & டி (6.53%), ஆக்ஸிஸ் வங்கி (11.53%) ஆகியவற்றில் அதன் பங்கு மூலதனம் கணிசமான அளவில் உள்ளது

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai