Enable Javscript for better performance
கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.270 கோடி திரட்டுகிறது ரெப்கோ- Dinamani

சுடச்சுட

    

    கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.270 கோடி திரட்டுகிறது ரெப்கோ

    By DIN  |   Published on : 08th February 2017 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    repco

    கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.270 கோடியை திரட்ட ரெப்கோ ஹோம் பைனான்ஸ் முடிவு செய்துள்ளது.
    இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
    உலக வங்கியின் உறுப்பினரான ஐ.எப்.சி. எனப்படும் சர்வதேச நிதி கழகத்துக்கு பாதுகாப்பான, மீட்கக்கூடிய, பங்குகளாக மாற்ற இயலாத கடன்பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
    இதன் மூலம், ரூ.270 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 7 ஆண்டு முதிர்வு காலத்தைக் கொண்ட இக்கடன்பத்திரங்களுக்கான வட்டி விகிதம் பின்னர் அறிவிக்கப்படும்.
    பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெறவுள்ள நிர்வாகக் குழு கூட்டத்தில் கடன்பத்திர வெளியீட்டுக்கான தீர்மானம் முன்வைக்கப்பட்டு அதற்கான ஒப்புதல் பெறப்படும் என்று ரெப்கோ ஹோம் பைனான்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai