Enable Javscript for better performance
கடன்பத்திர வெளியீடு மூலம் நிறுவனங்கள் பெற்ற மூலதனம் ரூ.45,957 கோடி- Dinamani

சுடச்சுட

    

    கடன்பத்திர வெளியீடு மூலம் நிறுவனங்கள் பெற்ற மூலதனம் ரூ.45,957 கோடி

    By DIN  |   Published on : 08th February 2017 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய நிறுவனங்கள் சென்ற ஜனவரி மாதத்தில் கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.45,957 கோடி மூலதனத்தைப் பெற்றன.
    இதுகுறித்து செபி அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
    நிறுவனங்கள் விரிவாக்கம் மற்றும் நடைமுறை செயல்பாடுகளுக்குத் தேவையான மூலதன த்தை தனிப்பட்ட முறையில் நிதி நிறுவனங்களுக்கு கடன்பத்திரங்களை ஒதுக்கீடு செய்வதன் மூலம் பெறுகின்றன.
    அந்த வகையில், சென்ற ஜனவரி மாதத்தில், இந்திய நிறுவனங்கள் ரூ.45,957 கோடி மூலதனத்தைப் பெற்றன. கடந்த டிசம்பரில் இவ்வழிமுறை மூலம் நிறுவனங்களுக்கு கிடைத்த தொகை ரூ.59,587 கோடியாக இருந்தது.
    நடப்பு நிதி ஆண்டில் இதுவரையில் (ஏப்ரல்-ஜனவரி) கடன்பத்திர வெளியீடு மூலம் நிறுவனங்கள் பெற்ற தொகை ரூ.5.2 லட்சம் கோடியை எட்டியுள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் இது ரூ.4.58 லட்சம் கோடியாக காணப்பட்டது.
    சென்ற ஜனவரியில் 183 கடன்பத்திர வெளியீடுகள் மேற்கொள்ளப்பட்டன. சென்ற ஆண்டு டிசம்பரில் இந்த எண்ணிக்கை 297-ஆக இருந்தது என்று செபி அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai