Enable Javscript for better performance
சியட் லாபம் 25% சரிவு- Dinamani

சுடச்சுட

    

    டயர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சியட் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் 25 சதவீதம் சரிவடைந்தது.
    இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
    நடப்பு 2016-17 நிதி ஆண்டின் அக்டோபர்-டிசம்பர் மூன்றாவது காலாண்டில் சியட் நிறுவனம் ரூ.1,557.21 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.1,483.83 கோடியாக காணப்பட்டது.
    இருப்பினும், நிகர லாபம் ரூ.112.23 கோடியிலிருந்து 25.30 சதவீதம் வீழ்ச்சியடைந்து ரூ.83.83 கோடியாக காணப்பட்டது என்று சியட் நிறுவனம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai