Enable Javscript for better performance
தங்கம் பவுனுக்கு ரூ.184 அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    
    gold_jewellery

    ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.184 அதிகரித்து, செவ்வாய்க்கிழமை ரூ.22,632-க்கு விற்பனையானது.

    சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றம், ரூபாய் மீதான மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.23 அதிகரித்து ரூ.2,829-க்கும், வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.225 அதிகரித்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.42,730-க்கும் விற்பனையானது.

    செவ்வாய்க்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்):

    ஒரு கிராம் தங்கம் 2,829
    ஒரு பவுன் தங்கம் 22,632
    ஒரு கிராம் வெள்ளி 45.70
    ஒரு கிலோ வெள்ளி 42,730

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai