Enable Javscript for better performance
ராம்கோ சிமென்ட்ஸ் வருவாய் 18% அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    
    ramco

    ராம்கோ சிமென்ட்ஸ் மூன்றாம் காலண்டு வருவாய் 18.07 சதவீதம் அதிகரித்தது.

    இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
    நடப்பு 2016-17 நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் ராம்கோ சிமென்ட்ஸ் வருவாய் ரூ.1,111.29 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.941.20 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 18.07 சதவீத வளர்ச்சியாகும்.
    செலவினம் ரூ.754.79 கோடியிலிருந்து 16.98 சதவீதம் உயர்ந்து ரூ.882.99 கோடியாக காணப்பட்டது. நிகர லாபம் ரூ.118.33 கோடியிலிருந்து 28.35 சதவீதம் அதிகரித்து ரூ.151.88 கோடியாக இருந்தது.
    மூன்றாவது காலாண்டில் சிமென்ட் விற்பனை 16.26 லட்சம் டன்னிலிருந்து 22.26 சதவீதம் அதிகரித்து 19.88 லட்சம் டன்னாக காணப்பட்டது.
    ரூ.180 கோடி மதிப்பிலான 25 லட்சம் பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்துக்கு நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளதாக ராம்கோ சிமென்ட்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai