Enable Javscript for better performance
சிட்டி யூனியன் வங்கியின் லாபம் ரூ.126 கோடி- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கி மூன்றாம் காலாண்டில் ரூ.126.62 கோடியை நிகர லாபமாக ஈட்டியது.
    இதுகுறித்து அந்த வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான என்.காமகோடி கூறியதாவது:
    நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் சிட்டி யூனியன் வங்கியின் வருவாய் ரூ.953.80 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.850.28 கோடியாக காணப்பட்டது. நிகர லாபம் ரூ.113.06 கோடியிலிருந்து 12 சதவீதம் அதிகரித்து ரூ.126.62 கோடியாக இருந்தது.
    கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதி நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் ரூ.597.97 கோடியாகவும் (2.98%), நிகர வாராக் கடன் ரூ.370.66 கோடியாகவும் (1.72%) இருந்தது.
    வங்கி திரட்டிய மொத்த டெபாசிட் ரூ.25,959 கோடியிலிருந்து 15.51 சதவீதம் அதிகரித்து ரூ.29,986 கோடியாக காணப்பட்டது. கடந்த ஐந்து காலாண்டுகளாக வட்டி வருவாய் தொடர்ந்து வளர்ச்சியடைந்துள்ளது என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai