Enable Javscript for better performance
ஜி.எஸ்.டி. விதிமுறைகள்: இணைய வர்த்தக நிறுவனங்கள் கவலை- Dinamani

சுடச்சுட

    
    e-comerse

    புது தில்லியில் ஃபிக்கி சார்பில் இணைய வர்த்தகத் துறை தொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட (வலமிருந்து) பிளிப்கார்ட் தலைமை நிர்வாகி சச்சின் பன்சால்,

    சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மசோதாவில் இடம்பெற்றுள்ள மூல வரிப் பிடித்தம் (டி.சி.எஸ்.) விதிமுறைகள் குறித்து, ஃப்ளிப்கார்ட், அமேஸான், ஸ்நாப்டீல் ஆகிய இணைய வர்த்தக நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.
    புது தில்லியில் ஃபிக்கி சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட ஃப்ளிப்கார்ட் இணை நிறுவனர் சச்சின் பன்ஸால் தெரிவித்ததாவது:
    டி.சி.எஸ். விதிமுறையின்படி இணைய வர்த்தக நிறுவனங்கள் விற்பனையாளர்களுக்கு செலுத்த வேண்டிய தொகையில் ஒரு பகுதியை கழித்துக் கொண்டு அதனை அரசுக்கு செலுத்த வேண்டியுள்ளது. இதனால், ஆண்டுக்கு ரூ.400 கோடி அளவுக்கு மூலதனம் முடக்கப்படும் நிலை உருவாகும். மேலும், இந்த நடவடிக்கை ஆன்-லைன் வழியாக பொருள்களின் விற்பனையை மேற்கொண்டு வரும் விற்பனையாளர்களின் ஊக்கத்தை கெடுப்பதாக உள்ளது. பிற வகை வணிகர்களுக்கு இதுபோன்ற வரிவிதிப்பு இல்லை.
    இம்மாத இறுதியில் ஜி.எஸ்.டி. மாதிரி சட்ட மசோதா இறுதி செய்யப்படவுள்ள நிலையில் அந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றார் அவர். மொத்த நுகர்வில் இணைய வழி வர்த்தக சந்தையின் பங்களிப்பு 2 சதவீதமாக உள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் இணைய வழி வணிக சந்தை 2,000 கோடி டாலரிலிருந்து 35,000 கோடி டாலராக வளர்ச்சியடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
    வரும் 2021-ஆம் ஆண்டில், இந்திய இணைய வழி வணிக சந்தை துறையில் இடம்பெற்றிருக்கும் 13 லட்சம் விற்பனையாளர்களில் 70% பேர் சிறிய நகரங்களை சேர்ந்தவர்களாக இருப்பர். நூறு கோடி புதிய வேலைவாய்ப்புகளையும் இந்தத் துறை உருவாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai