Enable Javscript for better performance
பேங்க் ஆப் இந்தியா லாபம் ரூ.101 கோடி- Dinamani

சுடச்சுட

    
    bankofindia

    பொதுத் துறையைச் சேர்ந்த பேங்க் ஆப் இந்தியா மூன்றாவது காலாண்டில் ரூ.101.72 கோடி நிகர லாபம் ஈட்டியது.
    இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நடப்பு நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் பேங்க் ஆப் இந்தியாவின் வருவாய் ரூ.11,594 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.11,086.95 கோடியாக காணப்பட்டது.
    வாராக் கடன் இடர்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.3,603.92 கோடியிலிருந்து குறைந்து ரூ.2,546.20 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.1,505.58 கோடி இழப்பைக் கண்டிருந்த பேங்க் ஆப் இந்தியா நடப்பாண்டில் ரூ.101.72 கோடி லாபம் ஈட்டியது.
    வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 9.18 சதவீதத்திலிருந்து அதிகரித்து 13.38 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 5.25 சதவீதத்திலிருந்து உயர்ந்து 7.09 சதவீதமாகவும் காணப்பட்டது என்று பேங்க் ஆப் இந்தியா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai