Enable Javscript for better performance
வீல்ஸ் இந்தியா லாபம் இரு மடங்கு உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    டி.வி.எஸ். குழுமத்தைச் சேர்ந்த வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்தது.
    இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் வருவாய் ரூ.537 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.470 கோடியாக காணப்பட்டது. நிகர லாபம் ரூ.5.98 கோடியிலிருந்து இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்து ரூ.13.21 கோடியாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத கால அளவில் வருவாய் ரூ.1,480 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,616 கோடியாகவும், நிகர லாபம் ரூ.23.02 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.40.90 கோடியாகவும் இருந்தது.
    நடப்பு நிதி ஆண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.5 இடைக்கால ஈவுத்தொகையாக வழங்க நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக வீல்ஸ் இந்தியா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai