Enable Javscript for better performance
எல்.ஐ.சி.யின் நிர்வாக இயக்குநராக ஹேமந்த் பார்கவா நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    எல்.ஐ.சி.யின் நிர்வாக இயக்குநராக ஹேமந்த் பார்கவா நியமனம்

    By DIN  |   Published on : 11th February 2017 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    hemant

    மத்திய அரசுக்கு சொந்தமான எல்.ஐ.சி. நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராக ஹேமந்த் பார்கவா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    இதுகுறித்து பணியாளர் அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
    தற்போது எல்.ஐ.சி. நிறுவனத்தின் தில்லி அலுவலகத்தில் மண்டல மேலாளராகப் பணியாற்றி வரும் ஹேமந்த் பார்கவா அந்த நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    இவர் அப்பதவியில், வரும் 2019-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி வரையில் நீடிப்பார். இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவைக் குழு வழங்கியுள்ளது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    எல்.ஐ.சி. நிறுவனத்தின் உயர் நிர்வாகக் குழு, தலைவர் மற்றும் மூன்று நிர்வாக இயக்குநர்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai