Enable Javscript for better performance
டி.என்.பி.எல். லாபம் ரூ.61 கோடி- Dinamani

சுடச்சுட

    
    tnpl

    தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் (டி.என்.பி.எல்.) நிறுவனம் மூன்றாம் காலாண்டில் ரூ.61.06 கோடி லாபம் ஈட்டியது.
    இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
    நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் டி.என்.பி.எல். நிறுவனத்தின் வருவாய் ரூ.752.31 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.509.92 கோடியாக இருந்தது.
    நிகர லாபம் ரூ.43.87 கோடியிலிருந்து 39.1 சதவீதம் அதிகரித்து ரூ.61.06 கோடியாக இருந்தது.
    நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத கால அளவில் வருவாய் ரூ.1,768.27 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.2,247.93 கோடியாகவும், நிகர லாபம் 29.3 சதவீதம் உயர்ந்து ரூ.201.16 கோடியாகவும் இருந்தது என்று டி.என்.பி.எல். அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai