Enable Javscript for better performance
தங்கம் பவுனுக்கு ரூ.136 அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    
    gold2

    ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.136 அதிகரித்து, சனிக்கிழமை ரூ.22,528-க்கு விற்பனையானது.
    சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றம், பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் ஆகிய காரணங்களால் தங்கம், வெள்ளியின் விலையில் நிலையற்றத் தன்மை நிலவி வருகிறது. இந்நிலையில் இரு நாள்களாக குறைந்த இதன் விலை, சனிக்கிழமை மீண்டும் அதிகரித்தது.
    சனிக்கிழமை மாலை நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 அதிகரித்து, ரூ.2,816-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.205 அதிகரித்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.42,570-க்கு விற்பனையானது.

    சனிக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்):

    ஒரு கிராம் தங்கம் 2,816
    ஒரு பவுன் தங்கம் 22,528
    ஒரு கிராம் வெள்ளி 45.50
    ஒரு கிலோ வெள்ளி 42,570

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai