Enable Javscript for better performance
பாரத ஸ்டேட் வங்கி லாபம் 134% அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    
    sbi

    பொதுத் துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கியின் மூன்றாம் காலாண்டு லாபம் 134.01 சதவீதம் அதிகரித்தது.
    இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
    நடப்பு 2016-17 நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் பாரத ஸ்டேட் வங்கியின் செயல்பாட்டு வருவாய் ரூ.24,413 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாயான ரூ.19,784 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 23.40 சதவீதம் அதிகமாகும். நிகர வட்டி வருவாய் ரூ.13,697 கோடியிலிருந்து 7.70 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.14,752 கோடியாக காணப்பட்டது. நிகர லாபம் ரூ.1,115 கோடியிலிருந்து 134.01 சதவீதம் உயர்ந்து ரூ.2,610 கோடியாக இருந்தது.
    வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 5.10 சதவீதத்திலிருந்து அதிகரித்து 7.23 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 2.89 சதவீதத்திலிருந்து உயர்ந்து 4.24 சதவீதமாகவும் காணப்பட்டது.
    கடந்த டிசம்பர் மாத இறுதி நிலவரப்படி திரட்டிய டெபாசிட் 22.10 சதவீதம் அதிகரித்து ரூ.20,40,778 கோடியாகவும், வழங்கப்பட்ட கடன் 4.81 சதவீதம் உயர்ந்து ரூ.14,97,164 கோடியாகவும் இருந்தது என பாரத ஸ்டேட் வங்கி அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai