Enable Javscript for better performance
கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க வேண்டும்: உர்ஜித் படேல்- Dinamani

சுடச்சுட

    

    கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க வேண்டும்: உர்ஜித் படேல்

    By DIN  |   Published on : 12th February 2017 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    urjit

    வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் வலியுறுத்தியுள்ளார்.
    இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
    ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதங்களை முன்பு பல முறை குறைத்துள்ளது. ஆனால், அதன் பயன் வாடிக்கையாளர்களை முழுமையாக சென்றடையவில்லை. இதனால், வங்கிகள் சில பிரிவுகளில் வழங்கும் கடன் வளர்ச்சி மந்த நிலையை கண்டுள்ளது.
    தற்போதைய நிலையில், நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளில் டெபாசிட்டுகள் அதிகரித்துள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு வங்கிகள் உடனடியாக கடனுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும்.
    வங்கிகள் பிற துறைகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை காட்டிலும், வீட்டு வசதி, தனிநபர் கடன் உள்ளிட்டவைகளுக்கான வட்டி விகிதங்களை மேலும் குறைக்க அதிக வாய்ப்புள்ளது என்றார் அவர்.
    ரிசர்வ் வங்கி சென்ற வாரம் வெளியிட்ட அதன் நிதி ஆய்வுக் கொள்கையில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யவில்லை. இதையடுத்து, வங்கிகள் குறுகிய கால அடிப்படையில் ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறும் கடனுக்கான (ரெப்போ) வட்டி விகிதம் 6.25 சதவீதமாகவும், ரிசர்வ் வங்கி பிற வங்கிகளிடமிருந்து பெறும் கடனுக்கான (ரிவர்ஸ் ரெப்போ) வட்டி விகிதம் 5.75 சதவீதமாகவும் தொடரும் என தெரிவித்தது.
    இருப்பினும், ரிசர்வ் வங்கி கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2016 செப்டம்பர் வரையிலான கால அளவில் ரெப்போ விகிதத்தை மொத்தம் 1.75 சதவீதம் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai