Enable Javscript for better performance
மஹிந்திரா & மஹிந்திரா லாபம் ரூ.1,112 கோடி- Dinamani

சுடச்சுட

    
    Mahindra

    மோட்டார் வாகன துறையைச் சேர்ந்த மஹிந்திரா & மஹிந்திராவின் மூன்றாம் காலாண்டு லாபம் ரூ.112.27 கோடியாக இருந்தது.
    இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நடப்பு நிதி ஆண்டின் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் மஹிந்திரா நிறுவனத்தின் வருவாய் ரூ.11,777.98 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.11,607.35 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 1.47 சதவீதம் அதிகமாகும்.
    மோட்டார் வாகன விற்பனையின் மூலம் பெறப்பட்ட வருவாய் ரூ.8,017.18 கோடியிலிருந்து 7 சதவீதம் குறைந்து ரூ.7,453.08 கோடியாக இருந்தது. அதேசமயம், டிராக்டர் விற்பனையின் மூலம் கிடைத்த வருவாய் 20.3 சதவீதம் உயர்ந்து ரூ.4,322.14 கோடியாக காணப்பட்டது.
    நிகர லாபம் ரூ.834.47 கோடியிலிருந்து 33.29 சதவீதம் அதிகரித்து ரூ.1,112.27 கோடியாக இருந்தது.
    உயர் மதிப்பு கரன்ஸி நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதையடுத்து அனைத்து விதமான வாகனங்களுக்கான தேவையும் சரிவடைந்தது. இதனால், கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது என்று மஹிந்திரா & மஹிந்திரா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai