Enable Javscript for better performance
மூன்றாவது வாரமாக பங்குச் சந்தைகளில் எழுச்சி- Dinamani

சுடச்சுட

    
    stockmarket

    இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாக எழுச்சி கண்டன.
    ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை ஆய்வில் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படவில்லை. இது சந்தை எதிர்பார்ப்பிற்கு மாறாக அமைந்தது. மேலும், நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாகவும், அடுத்த நிதி ஆண்டில் இது 7.4 சதவீதமாகவும் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
    டிசம்பர் மாதத்துக்கான தொழில்துறை உற்பத்தி புள்ளிவிவரம் குறித்த எதிர்பார்ப்பும் பங்கு சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் முதலீட்டாளர்களை உற்சாகமடைய செய்துள்ளன. இதையடுத்து, அவர்கள் தொடர்ச்சியாக நிறுவனப் பங்குகளில் முதலீட்டை அதிகரித்து வருகின்றனர்.
    மேலும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இந்திய நிறுவனங்களின் பங்குகளில் நிலையாக முதலீட்டை மேற்கொண்டு வருவது பங்குச் சந்தைகளுக்கு கூடுதல் வலு சேர்த்தது.
    சென்ற வாரத்தில் மட்டும் அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.743.18 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக செபி தெரிவித்துள்ளது.
    வீட்டு வசதி துறைக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு சலுகைகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அத்துறை நிறுவனப் பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடையே அதிக தேவை எழுந்துள்ளது.
    நுகர்வோர் சாதன துறை நிறுவனப் பங்குகளின் விலை அதிகபட்சமாக 5.20 சதவீதம் வரை ஏற்றம் கண்டது. இதையடுத்து, தகவல் தொழில்நுட்பம் 3.83 சதவீதமும், தொழில்நுட்பம் 3.63 சதவீதமும், ரியல் எஸ்டேட் 3.30 சதவீதமும், ஐ.பி.ஓ. 2.74 சதவீதமும், நுகர் பொருள்கள் 2.56 சதவீதமும் மற்றும் மின்சாரம் 1.86 சதவீதமும் ஏற்றம் கண்டன.
    அதே சமயம், உலோகம், மருந்து, எண்ணெய்-எரிவாயு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தது.
    சென்செக்ஸில் இடம் பெற்ற 30 நிறுவனங்களில் 15 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 15 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் காணப்பட்டது.
    நிறுவனங்களைப் பொருத்தமட்டில், டி.சி.எஸ். பங்கின் விலை 7.29 சதவீதம் அதிகரித்தது. மேலும், இன்ஃபோசிஸ் 3.54%, அதானி போர்ட்ஸ் 2.54%, விப்ரோ 2.26%, லார்சன் அண்டு டூப்ரோ 1.46%, ஹீரோ மோட்டோகார்ப் 1.28%, ஸன் ஃபார்மா 1.23%, மஹிந்திரா 1.19%, பார்தி ஏர்டெல் 1.16%, கெயில் 1.09% ஏஷியன் பெயின்ட்ஸ் 0.88%, ஹிந்துஸ்தான் யுனிலீவர் 0.25% உயர்ந்தன.
    அதே சமயம், டாக்டர் ரெட்டீஸ் பங்கின் விலை 5.30 சதவீதமும், சிப்லா 4.77 சதவீதமும், ஓ.என்.ஜி.சி. 3.76 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 2.51 சதவீதமும், லூபின் 1.59 சதவீதமும் குறைந்தன. இவை தவிர, பவர்கிரிட், என்.டி.பி.சி., டாடா ஸ்டீல் பங்குகளுக்கும் முதலீட்டாளர்களிடம் வரவேற்பில்லை.
    மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 93 புள்ளிகள் அதிகரித்து 28,334 புள்ளிகளாக நிலைத்தது.
    இப்பங்குச் சந்தையில் கடந்த வாரத்தில் ரூ.19,956.82 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
    தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 52 புள்ளிகள் உயர்ந்து 8,793 புள்ளிகளாக நிலைத்தது. இப்பங்குச் சந்தையில் கடந்த வாரத்தில் ரூ.1,22,609.90 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai