Enable Javscript for better performance
இந்தியா போஸ்ட் வங்கிக்கு மத்திய அரசு ரூ.500 கோடி ஒதுக்கீடு- Dinamani

சுடச்சுட

    

    இந்தியா போஸ்ட் வங்கிக்கு மத்திய அரசு ரூ.500 கோடி ஒதுக்கீடு

    By DIN  |   Published on : 14th February 2017 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    indiapost

    இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கிக்கு (ஐ.பி.பி.பி.) வரும் நிதியாண்டுக்கு மத்திய அரசு ரூ.500 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
    இதுகுறித்து மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
    வரும் செப்டம்பர் மாதத்துக்குள் ஐ.பி.பி.பி. நாடு தழுவிய அளவில் 650 கிளைகளை தொடங்க முடிவு செய்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு, ஐ.பி.பி.பி.க்கு வரும் 2017-18 நிதி ஆண்டுக்கு ரூ.500 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
    அதன்படி, இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கிக்கு நிறுவன முறையில் ரூ.125 கோடி மூலதனமும், மானியம் மூலமாக ரூ.375 கோடியும் வழங்கப்பட உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி முன்னோட்ட நடவடிக்கையாக ராய்ப்பூர் மற்றும் ராஞ்சி நகரங்களில் கிளைகளைத் தொடங்கி செயல்பாட்டை ஆரம்பித்தது.
    இந்தியா போஸ்ட் வங்கியில் மேற்கொள்ளப்படும் ரூ.25,000 வரையிலான டெபாசிட்டுகளுக்கு 4.5 சதவீத வட்டியும், ரூ.25,000-ரூ.50,000 வரையிலான டெபாசிட்டுகளுக்கு 5 சதவீத வட்டியும், ரூ.50,000-ரூ.1 லட்சம் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 5.5 சதவீத வட்டியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    இப்புதிய வங்கியில் அளிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ.800 கோடியாகும். இதில், மத்திய அரசு ரூ.275 கோடியை ஏற்கெனவே முதலீடு செய்துள்ளது.
    இந்தியா போஸ்ட் வங்கியில் தனி நபர் கணக்கில் ரூ.1 லட்சம் ரூபாய் வரையில் டெபாசிட் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai