Enable Javscript for better performance
ஏவுகணை தொழில்நுட்ப மேம்பாடு: எல் & டி - ஐரோப்பிய நிறுவனம் ஒப்பந்தம்- Dinamani

சுடச்சுட

    

    ஏவுகணை தொழில்நுட்ப மேம்பாடு: எல் & டி - ஐரோப்பிய நிறுவனம் ஒப்பந்தம்

    By DIN  |   Published on : 14th February 2017 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    LARSEN

    ஏவுகணைத் தயாரிப்பு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிகழ்ச்சியில் எம்.பி.டி.ஏ. நிறுவன தலைமைச் செயல் அதிகாரி அந்த்வான் பூவியே, எல் & டி குழுமத்தின் செயல் தலைவர் ஏ.எம்.நாயக்.

    இந்தியாவில் ஏவுகணை தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் எல் & டி நிறுவனம், ஐரோப்பிய பாதுகாப்புத் துறை நிறுவனமான எம்.பி.டி.ஏ. வுடன் திங்கள்கிழமை ஒப்பந்தம் மேற்கொண்டது.
    இதுகுறித்து எல் & டி குழுமத்தின் செயல் தலைவர் ஏ.எம். நாயக் தெரிவித்ததாவது:
    உள்நாட்டில் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான பல்வேறு வகையான ஏவுகணைகளை வடிவமைத்து இந்தியாவிலேயே தயாரிக்கும் வகையில் இந்தக் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    கடந்த ஆறு ஆண்டுகளாக எம்பிடிஏ நிறுவனத்துடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.
    இந்த ஒப்பந்தத்தின் மூலம் எங்களது உறவு மேலும் வலுப்படும். எல் & டி-யின் பாதுகாப்பு பிரிவிலான ஆண்டு விற்றுமுதலை வரும் 2021-ஆம் ஆண்டுக்குள் ரூ.10,000 கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார் அவர்.
    இந்த ஒப்பந்தம் குறித்து எம்பிடிஏ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அந்த்வான் பூவியே கூறியதாவது:
    இந்திய பாதுகாப்புப் படைக்குத் தேவையான தளவாடப் பொருள்களை பல ஆண்டுகளாக வழங்கி வருகிறோம். அதன் அடுத்த கட்ட வளர்ச்சிதான் இந்தக் கூட்டு ஒப்பந்தம். மத்திய அரசின் "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்துக்கு இது வலு சேர்ப்பதுடன் உள்நாட்டு ஆயுத தளவாட தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் என்றார் அவர்.
    எல் & டி எம்.பி.டி.ஏ. என்று பெயரிடப்பட்ட இந்தக் கூட்டுத் திட்டத்தில் எல் & டி-யின் பங்கு மூலதனம் 51 சதவீதமாகவும், ஐரோப்பிய பங்குதாரர் நிறுவனமான எம்.பி.டி.ஏ.-வின் பங்கு மூலதனம் 49 சதவீதமாகவும் இருக்கும்.
    முதல்கட்டமாக, இந்தக் கூட்டுத் திட்டத்தின் மூலம், ஐந்தாம் தலைமுறை ராணுவ பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் (ஏடிஜிஎம்5எஸ்), கடலோர பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களைத் தாக்கி அழிக்கும் அதிவேக ஏவுகணைகள் உருவாக்கப்பட உள்ளன.
    இந்தக் கூட்டுத் திட்டத்தின் முதல் ஆயுத தளவாடம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai