Enable Javscript for better performance
பி.எப்.சி. லாபம் ரூ.1,949 கோடி- Dinamani

சுடச்சுட

    
    pfc

    பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (பி.எப்.சி.) நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் ரூ.1,949.91 கோடியாக இருந்தது.
    இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
    நடப்பு 2016-17 நிதி ஆண்டின் மூன்றாவது காலண்டில் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் வருவாய் ரூ.7,063.08 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.6,994.10 கோடியாக காணப்பட்டது.
    நிகர லாபம் ரூ.1,582.32 கோடியிலிருந்து 23 சதவீதம் உயர்ந்து ரூ.1,949.91 கோடியாக இருந்தது.
    நிகர வாராக் கடன் இடர்பாட்டை சமாளிக்க ஒதுக்கப்பட்ட தொகை மூன்றாவது காலாண்டில் ரூ.51.19 கோடியாகவும், ஒன்பது மாத கால அளவில் இது ரூ.475.50 கோடியாகவும் காணப்பட்டது.
    கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதி நிலவரப்படி மொத்த வாரக் கடன் ரூ.7,520.21 கோடியாகவும், டிசம்பர் இறுதி நிலவரப்படி ரூ.7,302.67 கோடியாகவும் இருந்தது என்று பி.எப்.சி. நிறுவனம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai